நாகர்கோவில் நாகராஜர் கோவில் நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்ய தடையால் பக்தர்கள் ஏமாற்றம்..!

குமரிமாவட்ட பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜர் கோவிலும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அரசமரத்தை சுற்றிய நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்ய தடையால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை நாகர் சிலைக்கு பால் ஊற்றி வழிப்பட்டால் திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். ஆகவே வரும் நாட்களில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்ய பக்தர்கள் அனுமதி கேட்டுள்ளனர்.

Leave a Reply