குமரி மாவட்டத்தில் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமூலநகர் ஊரில் புனித லூர்து அன்னை ஆலய அடிக்கல் நாட்டு விழா…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமூலநகர் ஊரில் குருசுமலையின் மேல் புனித தோமையார் திருத்தலம் அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாதலமான இடம்.கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடிக்கு மேல் இருக்கும். இந்த திருதலத்திற்கு இந்து சமயத்தவர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் வெளிமானிலத்தவர்கள் வருகைதருவது உண்டு.

இந்தபகுதி திருமூலநகர் ஊர் பங்குதந்தை அருட்த்திரு X.பீட்டர் பாஸ்டியன் அவர்களும் ஊர்பொது மக்களும் இணைந்து கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் P.T.செல்வகுமார் அவர்களிடம் புனித தோமையார் திருத்தலத்தில் ஒரு சிற்றாலயம் கட்டித்தரும்மாறு கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் P. T.செல்வகுமார் அவர்கள் சிற்றாலயமான புனித லூர்து அன்னை ஆலய அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர்.

உடன் விழாவில் கலப்பை மக்கள் இயக்க குமரி மாவட்ட தலைவர் R.சிவபன்னீர் செல்வம்.கலப்பை மக்கள் இயக்க குமரி மாவட்ட செயலாளர் M.ஜாண் கிறிஸ்டோபர்.இயக்க சட்ட ஆலோசகர் T.பாலகிருஷ்ணன் மற்றும் கலப்பை மக்கள் இயக்க பொருப்பாளர்கள் மற்றும் ஆலீஸ்.கிங்ஸ்டன்.அசோக்.திருமூலநகர் ஊர்மக்கள் சுற்றுவட்டார பொதுமக்கள் சுற்றுலா பக்தர்கள் பலரும் சிறப்பித்துள்ளனர்.

Leave a Reply