வசந்தகுமாரின் மறைவு வேதனையளிக்கிறது – பிரதமர் மோடி

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70. ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 7 மணியளவில் எம்.பி. வசந்தகுமார் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் மறைவு வருத்தமளிக்கிறது. வசந்தகுமார் வணிகம் மற்றும் சமூக சேவைகளில் சிறந்து விளங்கியவர். அவருடனான எனது தொடர்புகளின் போது, தமிழகத்தின் முன்னேற்றம் குறித்த அவரது ஆர்வத்தை நான் எப்போதும் கண்பேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply