வசந்தகுமார் எம்.பி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை தகவல்…!

கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரது மனைவி தமிழ்செல்விக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால், இருவருக்கும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்.பி. வசந்த குமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இன்றைக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த தகவலை அவரது மகன் விஜய் வசந்த் உறுதிபடுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply