மனைவியின் கர்ப்பத்துக்கு காரணமான வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் மனு…!

குமரிமாவட்டம் பத்மநாபபுரத்தை சேர்ந்த ராம்கோபால் என்பவர் முகநூலில் தனது மனைவி பற்றிய தகவலை பரப்பிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதை தொடர்ந்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் நேரில் வந்து மனைவிக்கு தனக்கும் விவாகரத்து காரணத்தால் வெளிநாட்டில் இருந்து நான் சம்பாதித்து அனுப்பிய பணம்,நகை மற்றும் தனது மகனையும் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

குமரிமாவட்டம் பத்மநாபபுரத்தை சேர்ந்த ராம்கோபால் என்பவர் முகநூலில் தனது மனைவியை பற்றி ஒரு தகவலை பரப்பிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அதை தொடர்ந்து குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் நேரில் வந்து தனது மகன் மற்றும் மனைவிக்கு வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து கொடுத்த பணம்,நிலம் மற்றும் நகைகளை என்னிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற மனு ஒன்றை கொடுத்து சென்றுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் ஓட்டல் மேனேஜ்மென்ட்டுக்கு படித்துள்ளேன்.2008ம் ஆண்டு மண்டைக்காடு கோவில் திருவிழாவிற்கு சென்ற போது தக்கலை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணைப்பார்த்தேன் அவளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு பின்னர் காதலாக மாறியது.நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டு ஊருக்கு திரும்பி வந்தோம்.

ஆனால் என் வீட்டார் எங்களை ஏற்கவில்லை இதனால் மனைவி வீட்டுக்கு சென்று தங்கினோம். எனக்கு 2009 ம் ஆண்டு மகன் பிறந்தான். அதன் பிறகு நான் 2013ம் ஆண்டு வெளிநாட்டு வேலைக்கு சென்றேன்.அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறேன். அடிக்கடி ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு என் தந்தை ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தப்போது என்னை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் என் மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஊருக்கு வந்தேன். ஆனால் என் மனைவியை பிரிய எனக்கு விரும்பம் இல்லை.எனவே இதுபற்றி தக்கலை போலீசில் புகார் செய்தேன். அவர்கள் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். அதன்படி அங்கு விசாரணைக்கு சென்றேன்.

அப்போது என் மனைவியும் அங்கு வந்திருந்தார்.அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.இதுபற்றி விசாரித்தப்போது என் மனைவிக்கும் தனியார் வங்கி ஒன்றில் வேலைப்பார்க்கும் ஊழியருக்கும் கள்ள தொடர்பு இருப்பதும், அதனால் கர்ப்பமானது தெரியவந்தது.எனவே என்னுடைய மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் நான் வெளிநாட்டு வேலைக்கு சென்று சம்பாதித்து மனைவிக்கு அனுப்பிய பணம்,55 பவுன் நகை மற்றும் அவர் பெயரில் உள்ள 2.75 சென்ட நிலம் ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும்.மேலும் என மனைவியின் கர்ப்பத்தை கலைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன்.எனவே அதை யாரும் செய்யக்கூடாது என்று கேட்டு கொள்கிறேன். என்னிடம் மகனை ஒப்படைக்க முகநூல் நண்பர்கள் உதவ வேண்டும் என்று தனது முகநூல் பக்கத்தில் கூறிப்பிட்டுருந்தார்..

அதை தொடர்ந்து இன்று குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து இது சம்மந்தமாக ஒரு மனு அளித்து சென்றுள்ளார்..நான் என் மனைவி மீது வைத்த பாசத்தால் வெளிநாட்டில் சம்பாதித்த பணம் நகைகளை அவளுக்கு அனுப்பி வைத்தேன்.அந்த நகையும் என் மகனையும் என்னிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அதற்கு தாங்கள் ஒரு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுள்ளார்…இந்த சம்பவம் தற்போது குமரிமாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Leave a Reply