குமரி மாவட்ட ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு…!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ 2000 உதவித்தொகை உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது

குமரி மாவட்ட ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கொரோனா கால 144 தடை உத்தரவு காலத்தில் தமிழக அரசு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலன் கருதி ரூ 2000 உதவித்தொகை அறிவித்தது. இது குமரியை தவிர பிற மாவட்டங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழக அரசு உதவித்தொகை அறிவிப்பு வெளியிட்டு சுமார் 90 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை உதவித்தொகை குமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கடந்த மே மாதம் 13ஆம் தேதி ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலும் குமரி மாவட்டத்தில் முடி திருத்தும் பணியை சுமார் 3 ஆயிரம் கடைகள் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் செய்து வருகின்றனர். ஊராடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இவர்கள் நலன் கருதி அரசு அறிவித்த 2000 உதவித் தொகை இவர்களுக்கு உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply