அழகியபாண்டியபுரம் பேரூராட்சியில் அலங்கார தரை கற்கள் பதிப்பு ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

அழகியபாண்டியபுரம் பேரூராட்சியில் கனரா வங்கியில் இருந்து கிராமத்துக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து பல ஆண்டுகளாக காணப்பட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். எனவே, இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆஸ்டின் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில் சாலையை சீரமைக்க மாவட்ட கலெக்டர், பேரூராட்சி இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் ஆகியோரிடம் பொதுமக்களின் மனு அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து சாலையை சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. நிகழ்ச்சியில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலையை சீரமைத்து அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பொருளாளர் கேட்சன், தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அழகியபாண்டியபுரம் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார், கூட்டுறவு சங்க தலைவர் மைக்கேல், சண்முகம்பிள்ளை, சிவன்பிள்ளை, வெங்கட், நெல்லையாண்டார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply