ஓணம் பண்டிகையையொட்டி 30-ந்தேதி முழு ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்…!

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஓணப்பண்டிகை வருகிற 31-ந் தேதி(திங்கட்கிழமை) வருகிறது. மேலும் 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழுஊரடங்கு அமலில் இருக்கும். இதனால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படும். மேலும் ஓணப்பண்டிகை ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படுவதால், 30-ந் தேதியன்று முழு ஊரடங்கை தளர்த்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply