விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.வினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்..!

குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில், தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். தொடக்க நிகழ்ச்சியாக காலை நாகர்கோவில் புத்தேரியில் உள்ள முத்துக்குமார சாமி முத்தாரம்மன் கோவிலில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வடசேரியில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் காரவிளை கிறிஸ்தவ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் கட்சி கொடி வண்ணத்தில், விஜயகாந்த் பெயர் எழுதப்பட்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர் தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு கேக் வினியோகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துகுமார், ராஜேஷ்குமார், வளர்மதி, ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் பொன்.செல்வராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் வைகுண்டமணி, சிவக்குமார், நாகராஜன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் செல்வகுமார், விவசாய அணி செயலாளர் ஜெகன், இளைஞர் அணி துணை செயலாளர்கள் வைகுண்டராஜா, பரமானந்தன், மகளிரணி செயலாளர் பாக்கியவதி, விவசாய அணி துணைச்செயலாளர் ராஜமோகன்,

மாணவரணி செயலாளர் நாராயணன், துணை செயலாளர்கள் மதியழகன், மகேஷ், மாநகர செயலாளர் மணிகண்டன், பொருளாளர் மனோகரன், துணை செயலாளர்கள் நாகராஜன், அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி ஜெகன், பேரூர் செயலாளர்கள் கோபால் (தெங்கம்புதூர்), ரவீந்திரன் (கணபதிபுரம்), ஸ்ரீ அய்யப்பன் (அஞ்சுகிராமம்), நாகராஜன் (ஆரல்வாய்மொழி), எள்ளுவிளை ஊராட்சி செயலாளர் கண்ணன், அய்யப்பன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் நீலாவதி, தொண்டரணி செயலாளர் ராஜேஷ்,

ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன் (குருந்தன்கோடு), பரமராஜா (அகஸ்தீஸ்வரம்), வைகுண்ட கண்ணன் (ராஜாக்கமங்கலம்), நாகர்கோவில் மாநகர இளைஞரணி செயலாளர் சுந்தரராஜன் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் சுசீந்திரம், கொட்டாரம், ராஜாக்கமங்கலம், ஆரல்வாய்மொழி உள்பட 20 இடங்களில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் நாவல்காட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கட்சி தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

Leave a Reply