விஜயகாந்த் கிங்காக இருக்க வேண்டும் என விரும்புவது தேமுதிக தொண்டர்கள் உரிமை..அதிமுக அமைச்சர் பதில்!

தேமுதிகவின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவரது மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், “பேரவைத் தேர்தலில் தேதிமுக கூட்டணியா ? தனித்து போட்டியா என்பதை விஜயகாந்த் அறிவிப்பார்.

இப்போதைக்கு அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. தேர்தலின்போது முடிவு எடுக்கப்படும். தேர்தல் நெருங்கும் போது செயற்குழு, பொதுக் குழுவைக் கூட்டி முடிவு எடுக்கப்படும். தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது.விஜயகாந்த் இனி கிங்காக இருக்க வேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் எண்ணம்” என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “விஜயகாந்த் கிங்காக இருக்க வேண்டும் என விரும்பப்படுவது தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் உரிமை, அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவே தேமுதிக தெரிவித்துள்ளது” என்றார்.

Leave a Reply