மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே எஸ்.டி.பி. ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை, கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தங்கள் போன்றவற்றை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் மாநில அளவில் துண்டுப் பிரச்சாரம், வீதி நாடகங்கள் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply