நாகர்கோவில் வடசேரியில் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு கொரானா காரணமாக வேலை இல்லாதவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வேளையில் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிகோடியாக பணத்தை வழங்கி வருகிறது. அதேநேரம் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசு மாதம் 7,500 ரூபாய் வீதம் ஆறு மாதங்கள் வழங்க வேண்டும்.

தமிழக அரசு 5,000 ரூபாய் வீதம் ஆறு மாதங்களில் வழங்கவேண்டும் மற்றும் இந்தி திணிப்பு புதிய கல்வி கொள்கை போன்ற பிரச்சனைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாகர்கோவில் வடசேரியில் தெருவில் நின்று இந்த போராட்டத்தை நடத்தினர்.

Leave a Reply