நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அதில், நாகர்கோவில் பகுதியில் பணியாற்றும் பிஎஸ்என்எல் தொழிலாளர்களுக்கு 14 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க கூடாது, இபிஎஃப், இஎஸ்ஐ போன்ற சட்டப்பூர்வ சலுகைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு, தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மற்றும் மற்றும் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுயம்பு லிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செல்வம் , பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜார்ஜ், மாவட்ட செயலாளர் பி.ராஜூ , மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், அகில இந்திய பிஎஸ்என்எல் ஒய்வு பெற்ற ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

One thought on “நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

Leave a Reply