நலவாரிய ஆன்-லைன் பதிவை எளிமைப்படுத்த வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு..!

இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட குழு சார்பில் நலவாரிய ஆன்-லைன் பதிவை எளிமைப்படுத்த வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

முறைசாரா நல வாரியங்களில் நேரடி பதிவை நடத்த வேண்டும். காரோனா முடியும் வரை பதிவு விண்ணப்பங்களை நேரடியாக அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கம் மூலமாகவும் பெற்று அட்டை வழங்க வேண்டும்.

ஆன்லைன் பதிவை எளிதாக்க வேண்டும். ஆன்லைன் பதிவுக்கு முறையான அரசாணை வெளியிட வேண்டும். காரோனா நிதி தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஓராண்டு கால பென்ஷன் தொகையை வழங்க வேண்டும்.

நிலுவையில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கி வழங்க வேண்டும். மாவட்ட முறைசாரா தொழிலாளர்கள் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply