தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு இரண்டு உயரதிகாரிகள் தற்காலிகமாக பணி நீக்கம்..!

தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக இரண்டு உயரதிகாரிகள் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குநர் அமுதா, ரிஷிவந்தியம் வேளாண் உதவி இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக மேலும் 13 பேரை பணி நீக்கம் செய்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் உத்தரவிட்டுள்ளார். 7 வட்டார தொழில்நுட்ப ஊழியர்கள், பயிர் அறுவடை பரிசோதகர்கள் உள்ளிட்ட 13 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உள்ளனர்.

கமிஷன் பெற்றுக்கொண்டு விவசாயிகள் அல்லாதோர்க்கும் ஆண்டுதோறும் ரூபாய் 6000 பெற்று தந்தது தெரியவந்துள்ளது. கிசான் திட்டம் முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளதால் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply