தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் அச்சப்படும் நிலையில் பாஜக வளர்ச்சி உள்ளது பொன்.ராதாகிருஷ்ணன்…!

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் அச்சப்படும் நிலையில் பாஜக வளர்ச்சி உள்ளது என்றார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இதுகுறித்து திருச்செந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ் பண்பாட்டுக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது பாஜக என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது, தகுதியற்றவர்கள் வழங்கிய சான்றிதழை போன்றது. 2021இல் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சியமைக்கும். தேர்தல் கூட்டணி அந்தந்த நேரத்தை பொறுத்தது. தற்போது அதிமுக கூட்டணியில்தான்பாஜக உள்ளது.

இன்றைய சூழலில் மாணவர்கள் படிக்க விரும்புவதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழர்கள் அதிகப்படியாக வெற்றி பெற்று பணியாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அனைத்துக் கட்சிகளும் அச்சப்படும் நிலையில் உள்ளது என்றார்.

முன்னதாக, திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தெற்கு மாவட்டத் தலைவர் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்துப் பேசினார்.

கோட்ட இணை அமைப்பாளர் ராஜா, தெற்கு மாவட்ட பொதுச் செயலர் இரா.சிவமுருகன் ஆதித்தன், மாநில மகளிரணி
பொதுச்செயலர் கு.நெல்லையம்மாள், நகரத் தலைவர் சரவணன், இளைஞரணி மாவட்ட துணைத் ஐயப்பன் உள்ளிட்டடோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply