தக்கலை அருகே அப்பட்டுவிளையில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா…!

தக்கலை அருகே அப்பட்டு விளையில் அன்னை தெரசாவின் 111 ஆவது பிறந்தநாள் விழா மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. அன்னை தெரசா ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகவும் நோயாளிகளை குணமாக்க தன் வாழ்நாட்களை கழித்தவர்.

இவரது சேவையை பாராட்டி பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஆவார். அமைதிக்கான நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வழங்கப்பட்டது. அவரது பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடுவர். நேற்று அப்பட்டு விளையில் அன்னை தெரசாவின் 111வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தொல்லையை கட்டுப்படுத்த இறைவேண்டல் நடத்தப்பட்டது. இதில் சூசை மரியான் சுய உதவி மகளிர் குழுக்களின் கூட்டமைப்பு செயலாளர் தனிசிலி ராஜ், எபனேசர், காட்வின் செல்வராணி, கத்தரினாள் உட்பட பலர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply