காதல் எப்போ போர் அடிக்குதோ அப்ப தான் கல்யாணம்…இயக்குனர் விக்னேஷ் சிவன்…!

நயன்தாரா-விக்னேஷ் சிவன், ஜோடி கோலிவுட்டில் மிகப்பிரபலமான ஜோடி என்பது அனைவர்க்கும் தெரியும். நானும் ரௌடி தான் படத்தில் தான் இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். தற்போது வரை இந்த ஜோடி ஒருவர் மீது ஒருவர் காதல் மழை பொழிந்து வருகின்றனர். இவர்களின் கல்யாணம் எப்போது என்று அவ்வப்போது பேச்சுக்கள் உலவி வரும். சமீபத்தில் கூட இருவரும் 500 வருடம் பழமையான ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்யப் போவதாக செய்திகள் பரவின.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் “நாங்கள் இருவரும் எங்களுடைய வேலையில பிஸியாக இருக்கிறோம், இன்னும் நிறைய சாதனைகள் பண்ண வேண்டிருக்கு. நாங்கள் காதலிப்பது சலித்துவிட்டால் மட்டுமே திருமணம் பற்றி முடிவெடுப்போம். அப்படி இல்லை யென்றால் கல்யாணம் பற்றிய பேச்சுக்கு இப்போதைக்கு இடமில்லை”. என்று தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் பட வேலைகள் மும்மரமாக நடந்து வருகின்றனர்.

Leave a Reply