இன்று அரசு கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியீடு!

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் கடந்த ஜூலை 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. http://tngasa.in, http://tndceonline.org இல் ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யப்பட்டது. இணைய வசதி இல்லாத மாணவர்கள் 38 உதவி மையங்கள் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 95 ஆயிரம் இடங்களுக்கு, கிட்டத்தட்ட 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. மாணவர் சேர்க்கை பட்டியலில் பெயர் உள்ள மாணவர்கள் கல்லூரி இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி உறுதி செய்யலாம். வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் www.tngasa.in என்ற இணையத்தள வாயிலாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply