மார்த்தாண்டம் நகர வர்த்தகர் சங்கம் சார்பில் பஸ் போக்குவரத்து தொடங்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மார்த்தாண்டம் நகர வர்த்தகர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக மார்த்தாண்டம் மிகப்பெரிய நகரமாகும். மார்த்தாண்டம் பள்ளி, கல்லூரிகள் மிகப் பெரிய மருத்துவமனைகள் உள்ளடங்கிய பகுதியாக உள்ளது.

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், நகை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேம்பாலத்தின் கீழ் பகுதி அணுகு சாலை வழியாக பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் போது மீண்டும் பழையபடி மார்த்தாண்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் வியாபாரம் வளர்ச்சி அடையும்.

மார்த்தாண்டம் சந்தைக்கு அருகில் பஸ் நிலையம் இருப்பதால் கடற்கரை கிராம மக்கள், மலையோர கிராம மக்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கும் காலதாமதம் இல்லாமல் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும்.

ஆகையால் அனைத்து தரப்பு மக்களின் வசதிக்காக முழு ஊரடங்கு முடிந்து பொது போக்குவரத்து தொடங்கும்போது மார்த்தாண்டம் மேம்பால அணுகு சாலை வழியாக அனைத்து பஸ்களும் பஸ் நிலையம் வந்து செல்ல தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply