நாகர்கோவில் வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு தீ குளிக்க வந்தவரால் பரபரப்பு..!

நாகர்கோவில் வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு குடும்ப அட்டையில் பெயர் இல்லை என்று கூறி தீ குளிக்க வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் அய்யப்பன் ( 60 வயது) இவர் நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்தார் அலுவலகம் சென்ற அவர் தனது பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தனக்கு புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்றும் கேட்டார் ஆனால் அதற்கு அதிகாரிகள் தரப்பில் வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டால்.

உடனே அவர் தன் கையில் இருந்த பையில் இருந்து மண்ணெண்ணையை எடுத்து குடும்ப அட்டை தராவிட்டால் தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டினார் தகவலறிந்த போலீசார் தகவல் கொடுத்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் அவர் வைத்திருந்த மண்ணெண்ணை கேனையும் போலீசார் கைப்பற்றினார்கள் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..

Leave a Reply