நாகர்கோவில் அருகே வைக்கப்பட்ட காமராஜர் சிலையை அகற்றியதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கிராமத்தில் பட்ட இடத்தில் வைக்கப்பட்ட காமராஜர் சிலையை அகற்றியதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட இலந்தையடிதட்டு என்ன ஊரில் பட்டா நிலத்தில் காமராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை அதிகாரிகள் திடீரென அகற்றியதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். ஏற்கெனவே நாகர்கோவில் வட்ட வரைபடம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்டது, இந்து கல்லூரி அருகே தியாகி சிதம்பரநாதன் பெயரை பலகையை அகற்றிய சம்பவம் போன்ற பிரச்சனைகளுக்கு இடையே காமராஜர் சிலையை அகற்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply