குமரி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் தனியார் ஓட்டலில் பயங்கர தீவிபத்து..!

குமரி மாவட்டத்தின் மையப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள சந்திப்பில் பிரபல தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இன்று மதியம் பெண் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட வந்தார். அப்போது ஓட்டல் ஊழியர்கள் ஏசியை இயக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஏசியில் இருந்து புகை வர ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து வெளியேற்றினர். இதனை தொடர்ந்து ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ பரவி எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து ஓட்டல் ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு வண்டிகளில் சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டல் உள்பகுதியில் 4 எரிவாயு சிலிண்டர் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி 4 சிலிண்டரயும் வெளியே கொண்டு வந்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

மாவட்டத்தின் முக்கிய பகுதியான கலெக்டர் அலுவலக சாலை சந்திப்பு பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply