வாவறை பஞ்சாயத்து தலைவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்..!

முன்சிறை யூனியனுக்குட்பட்ட வாவறை பஞ்சாயத்து தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மெற்றில்டா இருந்து வருகிறார். இவர் அந்த கட்சியில் இருந்து விலகி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அவருடன் ராஜன், ஸ்டெபினோ, ராஜேஷ் மற்றும் ஆதரவாளர்களும் இணைந்தனர். அப்போது வாவறை பஞ்சாயத்து காங்கிரஸ் கட்சி தலைவர் சின்னப்பர், முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபர், மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், செயலாளர்கள் பால்ராஜ், டென்னிஸ், செயற்குழு உறுப்பினர் பெனட், பஞ்சாயத்து தலைவர்கள் கிறிஸ்டல் ஜாண், இவான்ஸ், ஏழுதேசம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply