புதிய காங்கிரஸ் தலைவர் குறித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை..!

புதிய காங்கிரஸ் தலைவர் குறித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து காங்கிரஸ் எம்பி செல்லகுமார் காணொலி மூலம் பங்கேற்றுள்ளார். சோனியா தலைவராக தொடர்வதா அல்லது ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ஏற்பாரா? என எதிர்பார்ப்பு நிலவுகிறது. நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படலாம் எனவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என 23 தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தொடர விரும்பவில்லை என சோனியா காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய நிர்வாகிகளிடம் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply