நாகர்கோவிலில் விநாயகர் சிலைகளை அந்த அந்த பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் போலீஸ்பாதுகாப்புடன் சமூக இடைவெளிவிட்டு கரைத்தனர்..!

நாகர்கோவிலில் இந்துமாக சபா சார்பில் வீடுகள் மற்றும் கோயில்களில் வைக்கபட்ட விநாயகர் சிலைகளை அந்த அந்த பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் போலீஸ்பாதுகாப்புடன் சமூக இடைவெளிவிட்டு இந்துமாக சாபாவினர் கரைத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை ஆண்டுதோறும் மும்பைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் வெகுவிமர்சையாக மக்கள் கொண்டாடுவர். குறிப்பாக, பல்வேறு இந்து அமைப்பினரும் தங்கள் பகுதியில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து 5 அல்லது 9 நாட்கள் என பூஜை செய்வார்கள்.

யார் பெரிய விநாயகர் சிலை வைக்கிறார்கள், யார் வித்தியாசமான சிலைகளை வைக்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள் போட்டா போட்டி நிலவும். சிலைகள் வைக்கபட்ட இடங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடாபடுவோர் பின்பு ஓவ்வொரு இந்து அமைப்பும் ஒவ்வொருநாட்கள் விதமாக சிலைகளை கடலில் வாகனங்களில் ஊர்வலமாக கரைப்பார்கள்.ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று வைரஸ் தாக்கத்தினால் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனால் எந்த ஒரு பெரிய  விநாயகர்  சிலைகளையும் அமைக்கப்படாமல் ஒரு அடி முதல் இரண்டடி மன்று அடி உயரமுள்ள சிறிய விநாயகர் சிலைகள் மட்டுமே கோயில்கள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் இன்று விநாயகர் சிலைகள் கரைக்கபடுகிறது இந்து முன்னனி சார்பிலும் நாளை சிவசேனா சார்பிலும் கரைக்கப்படுகிறது.

இந்து மாகசாபா சார்பில் குமரி மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கோயில்களில் பூஜிக்கப்பட்ட சிலைகள் நேற்று அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன நாகர்கோயில் வட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் கோவில்களில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று ஒழுகினசேரி பகுதியில் உள்ள கோதை ஆற்றில் கொண்டு கரைக்கப்பட்டன.

ஊர்வலங்கள் செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்து நிலையில் அந்த தெருவை சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் அவர்கள் பூஜித்த சிலைகளை அவர்களாகவே கொண்டு தகுந்த போலீஸ்பாதுகாப்புடன் சமூக இடைவெளியை கடைபிடித்து குளங்களில் கரைத்தனர்.

மேலும் குமரி மாவட்டம் முழுவதும் அந்த பகுதியில் இந்து மாகா சபா வினர் குளங்கள் ஆறுகளில் கரைத்து வருகின்றனர்.

Leave a Reply