குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு பிரியாணி…!

குமரி மாவட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் அறிவுறுத்தலின்படி அ.தி.மு.க. சார்பில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஞாயிற்றுக்கிழமைதோறும் மூலிகையுடன் கூடிய கோழி பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை, கொரோனா நோயாளிகளுக்கு அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply