ஆரல்வாய்மொழியில் கழிவுநீர் கிணற்றில் விழுந்த பசுமாடு தீயணைப்பு துறையினர் மீட்டனர்…!

ஆரல்வாய்மொழி முத்துநகரை சேர்ந்தவர் வர்க்கீஸ் (வயது 53). இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வர்க்கீஸ் வளர்த்து வரும் பசுமாட்டில் ஒன்று அப்பகுதியில் உள்ள காலிமனையில் மேய்ந்து கொண்டிருந்தது. வர்க்கீஸ் மாட்டை கயிற்றில் கட்டி கையில் பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அங்குள்ள கழிவுநீர் கிணற்றின் மூடியை உடைத்துக் கொண்டு பசுமாடு உள்ளே விழுந்தது. கயிறை பிடித்து கொண்டிருந்த வர்க்கீஸ் சுதாரித்து கொண்டதால் கிணற்றுக்குள் விழாமல் தப்பினார். இதைகண்ட வர்க்கீஸ் அதிர்ச்சி அடைந்தார். கிணற்றுக்குள் விழுந்த பசுவால் வெளியே வர முடியாமல் உரக்ககத்தியது. உடனே, இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அதிகாரி துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், பொக்லைன் எந்திரம் உதவியுடன் கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டப்பட்டது. அதைதொடர்ந்து கயிறு மூலம் பசுமாடு மீட்கப்பட்டது.

Leave a Reply