நாகர்கோவிலில் விநாயகர் சிலை கோவிலில் வைத்து பூஜை மற்றும் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன

நாகர்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா நாடுமுழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது இதனையொட்டி விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுகின்றன கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கூட்டங்கள் கூடவும் விழாக்கள் நடத்தவும் அரசு தடை விதித்துள்ள நிலையில் விநாயகர் சிலைகள் முக்கிய இடங்களில் வைத்து சிலைகளுக்கு பூஜைகள் நடத்தவும் பின்னர் அதனை ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து பூஜை நடத்தவும் பின்னர் அதனை நீர் நிலைகளில் கூட்டம் இன்றி சென்று கரைக்கவும் அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள செட்டிதெரு மற்றும் ஊட்டுவாழ்மடம் விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து யாகங்களும் அர்ச்சணைகளும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் ஏராளமானவோர் விநாயகரை வணங்கிசென்றனர்.

Leave a Reply