கொரோனாவில் இருந்து குமரியில் இதுவரை 7 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர் கலெக்டர் தகவல்…!

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் சோதனை சாவடிகள் மூலமாக இதுவரை மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 448 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி, கோவிட் கேர் மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 1,497 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

குமரியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,027 பேர் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பினர். நோய் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த 15 ஆயிரத்து 156 பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர். பொது இடங்களில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 72 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ரூ. 7 ஆயிரத்து 200 வசூலாகியது. குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 8 ஆயிரத்து 632 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 343 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply