நாகர்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா விநாயகர் சிலை கோவிலில் வைத்து பூஜை..!

நாகர்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து ஊர மக்கள் சார்பாக திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

நாளை விநாயகர் சதுர்த்தி விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது இதனையொட்டி விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுகின்றன கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கூட்டங்கள் கூடவும் விழாக்கள் நடத்தவும் அரசு தடை விதித்துள்ள நிலையில்.

விநாயகர் சிலைகள் முக்கிய இடங்களில் வைத்து சிலைகளுக்கு பூஜைகள் நடத்தவும் பின்னர் அதனை ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து பூஜை நடத்தவும் பின்னர் அதனை நீர் நிலைகளில் கூட்டம் இன்றி சென்று கரைக்கவும் அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சி விளை என்ற இடத்தில் உள்ள விநாயகர் கோவிலில் மூன்றரை அடி உயர விநாயகர் சிலை இன்று பூஜைக்காக ஊர்தலைவர் மற்றும் பாஜாக குமரி மாவட்ட பொருளாளர் முத்துராமன் தலைமையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது விநாயகருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினார்கள்.

Leave a Reply