விவசாயிகள் தொழில் சங்கம் சார்பாக நாகர்கோவிலில் மண் சட்டி ஏந்தி நூதன போராட்டம் நடைபெற்றது..!

வைரஸ் தொற்றை காரணம் காட்டி வேலை மறுக்கப்பட்ட 55 வயதுக்கு மேலான ஊரக வேலை தொழிலாளர்களுக்கு வேலைக்கான ஊதியத்தை நிவாரணமாக வழங்க கேட்டு விவசாயிகள் தொழில் சங்கம் சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மண் சட்டி ஏந்தி நூதன போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வயது வித்தியாசம் இன்றி வேலை செய்து வருகின்றனர் இந்நிலையில் 55 வயதுக்கு மேற்பட்ட ஊரக வேலை தொழிலாளர்களை கொரோனா வைரஸ் தொற்று எளிதில் பாதித்து விடும் என காரணம் கூறி மாவட்ட நிர்வாகம் கடந்த இரு மாதங்களாக வேலை வழங்க மறுத்து வருகிறது.

இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் ஐயாயிரத்துக்கும் அதிகமான 55 வயதுக்கு மேற்பட்ட ஏழை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு எந்தவித வருமானமும் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர் இது குறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் கோரிக்கைகள் வைத்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே கடந்த இரு மாதங்களாக வேலை மறுக்கப்பட்டு வேலை இழந்து தவிக்கின்ற ஊரக வேலை தொழிலாளர் அனைவருக்கும் வேலைக்கான ஊதியத்தை வழங்கிடவும் உடனடியாக இரு மாத சம்பளத்தை அவர்களுக்கு கொடுக்கவும் வலியுறுத்தி நூதன முறையில் கைகளில் சட்டி ஏந்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply