தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட பேரூராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம்..!

கன்னியாகுமரி: தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பேரூராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் குமரி மாவட்ட பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாலை நேர போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

பேரூராட்சிகளில் தர ஊதியம் ரூபாய் 1900 பெரும் பணியாளர்களுக்கு ஏற்படும் தணிக்கை தடையை நிவர்த்தி செய்து வழங்க வேண்டும்.

பேரூராட்சிகளில் 2017 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள கீழ்நிலை பணியாளர்களின் 20 சதவீத பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட்டு தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

பிற மாவட்டங்களில் உள்ளது போல் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பேரூராட்சி களில் தலைமை எழுத்தர் பணியிடம் உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply