கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்..!

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் பில்லர்ஸ் கேட் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று 19.08.2020 காலை 11 மணிக்கு தலைவர் எ.மீரான் மைதீன் தலைமையில், பொது செயலாளர் P.ஹிமாம் பாதுஷா முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லீம் ஜமாஅத் கூட்டமைப்பின் வர்த்தக நல பிரிவு சார்பாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு இரவு 8 மணி வரை குமரி மாவட்டம் முழுவதும் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளரிடமும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மாண்புமிகு என் தளவாய்சுந்தரம் அவர்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் வர்த்தக பிரிவு கொடுத்த கோரிக்கை மனுவை பெற்ற தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அவர்கள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்வேன் என்று கூறியிருந்தார், அதனடிப்படையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற மாண்புமிகு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய்சுந்தரம் அவர்களின் முயற்சியால் நேற்றைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நேற்று முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறக்க உத்தரவு பிறப்பித்தார்கள்.

அந்த உத்தரவை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரே ஐஏஎஸ் அவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வர்த்தக நல பிரிவு சார்பாக நன்றியினை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நசீர் உசேன், செய்தி தொடர்பாளர் எஸ் ஆர் ஹாஜிபாபு, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் எம்.ஏ.கே. சலீம் ,செயலாளர் மாலிக்கீன், பொருளாளர் முகமது சலீம், மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்,ஏ, முகம்மது அயூப்கான், மாநகர தலைவர் ஜாகிர் உசேன், மாநகர இளைஞரணி தலைவர் நவாஸ் , உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply