நாகர்கோவிலில் மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…!

தேசிய மீன்வள கொள்கையை கைவிட வலியுறுத்தி கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப நோக்கை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு உள்ள தேசிய மீன்வள கொள்கையை கைவிட வேண்டும் விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் கெடுக்கும் வகையில் உள்நாட்டு மீனவர் அல்லாத கம்பெனிகளுக்கும் பெரு முதலாளிகளுக்கும் உள்நாட்டு நீர் ஆதாரங்களையும் தாரை வார்த்து கடற்பரப்பை தனியாருக்கு தாரை வார்க்கும் மீனவர் விரோத செயலை கைவிட வேண்டும்.

மக்கள் விரோத சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Leave a Reply