நாகர்கோவில் மகளிர் மேல் நிலைப் பள்ளியில் திடீர் உள்ளிருப்பை நடத்திய மாணவியின் தந்தை..!

நாகர்கோவில் ஜோசப் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று தனது மகளை பள்ளியில் சேர அனுமத்திக்காத காரணத்தால் பள்ளியில் திடீர் உள்ளிருப்பை நடத்திய மாணவியின் தந்தை.

மாணவி படித்து வந்த பள்ளியில் அனைத்து பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் இந்த பள்ளியின் நுழைவு தேர்வுவில் எனது மாணவி தகுதி பெறவில்லை என்று ஏதோ உள்நோக்கத்தில் நாகர்கோவில் ஜோசப் ஜோசப் கான்வென்ட் பள்ளி நிர்வாகம் எனது மகளை பள்ளியில் சேர்த்து கொள்வதற்கு தயக்கம் காட்டுவதாக கூறி பள்ளியின் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளது. அதே போல் கடந்த கல்வியாண்டில் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.அதை தொடர்ந்து 2020-2021 ம் கல்வியாண்டின் தொடக்கமும் கொரோனாவால் பள்ளிகளை திறக்க முடியாமல் காலம் கடந்து செல்வதால் பள்ளி கல்வித்துறை தற்போது1, 6, 9-ம் வகுப்புகளுக்கான 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை.

இன்று முதல் பதிவு செய்ய உத்தரவை பிறப்பித்து இந்த நிலையில் குமரிமாவட்டம் நாகர்கோவில் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் தந்தை திடீரென பள்ளியின் வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து அந்த மாணவின் தந்தை அங்கு திரண்டவர்களிடம் தெரிவித்த கருத்தால் பரபரப்பானது.

எனது மகள் நாகர்கோவில் ஜோசப் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று தனது மகளை பள்ளியில் சேர அனுமத்திக்காவில்லை அவள் படித்து வந்த பள்ளியில் அனைத்து பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற்று படித்து வருபவள் கொரோனா காரணத்தால் தொழில் இல்லாமல் வருமானம் கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து வரும் சூழலில்.

அரசு உதவிப்பெறும் பள்ளியில் சேர்த்தால் எங்கள் குடும்ப கடன் பிரச்சனையில் இருந்து மீளலாம் என்று நினைத்து இந்த பள்ளியில் சேர்க்க வந்த நிலையில் நுழைவு தேர்வுவில் எனது மாணவி தகுதி பெறவில்லை ஏதோ உள்நோக்கத்தில் கூறியதால் உள்ளிருப்பு நடத்த முயன்றேன் என்று தெரிவித்த சம்பவம் பள்ளி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் அறிந்து கோட்டார் காவல் நிலைய போலீஸ் நேரில் வந்து அந்த மாணவியின் தந்தையிடமும் பள்ளி நிர்வாகத்திடம் பேசி அவரை அனுப்பி வைத்துள்ளர்..

Leave a Reply