நாகர்கோவில் திமுக மாவட்ட அலுவலகத்தில் முரசொலி மாறன் 87வது பிறந்த நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..!

முன்னாள் மத்திய அமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த அரசியல் வாதிகளில் ஒருவரான முரசொலி மாறன் அவர்களின் 87வது பிறந்த நாளை யொட்டி நாகர்கோவில் திமுக மாவட்ட அலுவலகத்தில் அவரது புகைப்படத்திற்கு திமுக பொருளாளர் ஐ.கேட்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உடன் ஆஸ்டின் எம் எல் ஏ,முன்னாள் எம்.பி.ஹேலான் டேவிஸ்சன், மாவட்ட அவை தலைவர். ஜோசப் ராஜ், மாவட்ட துணை செயலாளர். ஜோஸ், அர்ஜுனன், மணிமாறன், செயற்குழு உறுப்பினர். சாய்ராம், பொதுகுழு உறுப்பினர் பெஞ்சமின்

ஒன்றிய கழக செயலாளர்.நெடுசெழியன், மதியழகன், லிவிங்ஸ்டன், ராமேஷ் பாபு, குட்டிராஜன், தில்லை செல்வம், சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முரசொலி மாறனின் இயற்பெயர் தியாக ராஜசுந்தரம், முரசொலி பத்திரிகைக்காவும், திரை உலகத்துக்காகவும் மாறன் என்ற புனைபெயர் சூட்டிக் கொண்டார்.

திரை உலகத்துக்குள் நுழையும் போது முரசொலி மாறனாக உருமாறினார். அதுவே அவரது சரித்திரை அடையாளமாகவே இருந்து வருகிறது பண்முக தன்னைக்கொண்ட தலைவர்களில் ஒருவராகவும் கலைஞரின் வலது கரமாகவும் செயல்ப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply