கோட்டார் பகுதி கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் தங்கம் மற்றும் பணம் கொள்ளை…!

நாகர்கோயில் கோட்டார் பகுதியில் இன்று அதிகாலை கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் ஆறு கிராம் தங்கம் மற்றும் ரொக்கப்பணம் ஆயிரம் ரூபாய் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சரலூர் பகுதியில் உள்ள நீலவேணி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை கதவின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு நீலவேணி அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆறு கிராம் தங்கத்தாலியை கொள்ளையடித்த தோடு மற்றும் உண்டியலில் காணப்பட்ட ரொக்கப்பணம் ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். சம்பவத்தை அறிந்து கோயிலில் திரண்ட ஊர்மக்கள் சம்பவம் குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்ட தோடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply