‘கொரோனா அறிகுறி இருப்போா் சுய மருத்துவம் பாா்க்கக் கூடாது’ : மாவட்ட ஆட்சியா்

கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் பொதுமக்கள் சுயமருத்துவம் செய்யாமல் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவிலைச் சோ்ந்த மருத்துவா் ஒருவருக்கு நீரிழிவு நோயும் உயர்ரத்த அழுத்தமும் இருந்த நிலையில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சளி பரிசோதனை மேற்கொள்ளாமல், தாமாகவே மருந்துகளை உள்கொண்டுள்ளாா். ஐந்து நாள்களுக்கு பிறகு சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

உரிய நேரத்தில் தொற்று கண்டறியாத காரணத்தால் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது 70 சதவீதம் மட்டுமே சுவாச நிலை இருந்துள்ளது. வயது முதிா்வு காரணமாக நீரிழிவு மற்றும் உயர்ரத்த அழுத்தம் இருந்ததால் அவா்

கால தாமதமாக சிகிச்சை பெற்ால் அவரது உயிரிழக்க நேரிட்டது. எனவே பொதுமக்கள் தொற்று அறிகுறி இருந்தால் அலட்சியமாக எண்ணாமல் உடனடியாக பரிசோதனை செய்வதன் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட முடியும்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவா்களில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகம்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக கன்னிகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக.18) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு சளி மாதிரி சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும். சிறுநீரக நோய்கள் உள்ளவா்களுக்கு அவா்கள் டயாலிசிஸ் செய்யும்போது சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்படும்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, களப்பணியாளா்கள், சோதனைச் சாவடிகள் மூலமாக இதுவரை 10,036 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, கரோனா கவனிப்பு மையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 1,212 போ் சிகிச்சையில் உள்ளனா். தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 6,200 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், வெளியூா்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்தவா்கள் என மொத்தம் 18,895 போ் வீட்டு தனிமை கண்காணிப்பில் உள்ளனா். முகக் கவசம் அணியாமல் திங்கள்கிழமை பொது வெளியில் நடமாடிய 112 பேருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply