கேசவன்புத்தன் துறையில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது..!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேசவன்புத்தன் துறையில் கடலரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள  100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் அந்த பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஏற்பாட்டில் மீனவர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசங்கள்  5 கிலோ அரிசி மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.  கேசவன்புத்தன்துறை பங்குத்தந்தை ஜெகன்  ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply