கன்னியாகுமரி மாவட்ட மின்வாரிய கூட்டுறவு அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம்..!

கன்னியாகுமரி மாவட்ட மின்வாரிய கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலகத்தில் மின் வாரிய பணியாளர்களுக்கு ஈவு தொகையாக வழங்க வேண்டிய 80 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் வாரிய பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள் இவர்களில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு ஈவு தொகையாக 80 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டியுள்ளது கடந்த மார்ச் மாதம் வழங்கப்படவேண்டிய இந்த தொகை இதுவரையிலும் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதனால் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள் கடந்த பல மாதங்களாக இந்த தொகையை திருப்பித் தர வேண்டும் என்று கேட்டு பணியாளர்கள் சிக்கன நாணய சங்கத்தை வலியுறுத்தியும் பணம் வழங்கப்படவில்லை இதனை கண்டித்தும் உடனடியாக ஈவுத் தொகையை வழங்க கேட்டும் நாகர்கோவில் மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தை நாணய சங்க அலுவலகத்தை மின்வாரிய தொழிலாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..

Leave a Reply