கன்னியாகுமரி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் பணியாளர்கள் கவன ஈர்ப்பு தொடர் முழக்க ஆர்பாட்டம்..!

கொரானா தொற்று காரணமாக தமிழகத்தில் உயிரிழந்த 5 டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி மற்றும் இழப்பீட்டு தொகையாக தலா 50 லட்சம் ரூபாய் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவாரம் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் பணியாளர்கள் கவன ஈர்ப்பு தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரானா தடை உத்தரவு காலங்களில் பணியில் இருந்த தமிழகம் முழுவதும் 5 டாஸ்மாக் ஊழியர்கள் கொரானாவிற்கு பலியாகி உள்ளனர். இவர்களுக்கு தலா ஐம்பது லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குவ தோடு இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மேலும், தடை உத்தரவு அமலில் இருந்தபோது விற்பனையான தொகைக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

ஊரடங்கில் அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை என்ற ஊடங்கு தளர்வை டாஸ்மாக் கடைகளுக்கும் அமுல் படுத்த வேண்டும், கொரோனா காலத்தில் மற்ற துறை தொழிளார்களுக்கு வழங்கபட்டு இல்லத்தை போல காபிட்டு வசதி தரவேண்டும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஒரு வார காலத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அரசின் கவன ஈர்ப்பு தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடைபெருவதாகவும், கேரளவில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கேரளா அரசு அமல்படுதபட்ட பனி பாதுக்கப்பு உள்ளிட்ட வழிமுறைகளை தமிழக அரசும் அமல் படுத் வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Leave a Reply