கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் விரைவில் நலம் பெற வேண்டும்: மு.க ஸ்டாலின் ட்வீட்…!

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, எம்.பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், அவர் விரைந்து நலம் பெற தான் விரும்புவதாகவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து வசந்தகுமார் சீக்கிரமாக குணமடைய வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வசந்தகுமார் விரைவில் நலம் பெற வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், #COVID19 பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் @INCTamilNadu-வின் முன்னணித் தலைவர் அன்புச் சகோதரர் @vasanthakumarH MP அவர்களுடைய புதல்வர் & குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் விசாரித்தேன்.

அவர் விரைவில் முழுமையான உடல் நலன்பெற்று மக்கள் பணியைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply