கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கூடுமானவரை வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 83 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இதில் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 22 சதவீதமும், சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 15.59 சதவீதமும், உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 4.5 சதவீதமும், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 1.83 சதவீதமாகும்.

இந்த நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கும் நபர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா தொற்று சம்மந்தமான அறிகுறிகள் ஏதாவது இருப்பதாக தோன்றினால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் தெரிவித்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும்.

சுகாதார துறையின் மூலம் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் குறிப்பிட்டுள்ள நோய் பாதிப்பு உடையவர்கள் கணக்கெடுப்புக்காக காத்திருக்காமல் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தகவல் கொடுத்து பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும். கூடுமானவரை வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அவசர தேவைகளுக்காக வெளியில் வர நேர்ந்தால் முகக்கவசம் அணிவதோடு சமூக இடைவெளியையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply