நாகர்கோவிலில் தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியல் இனத்தில் சேர்க்கக் கேட்டு மாவட்ட ஆட்சினரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியல் இனத்தில் சேர்க்கக் கேட்டு மாவட்ட ஆட்சினரிடம் மனு அளிக்கப்பட்டது

இந்து மதத்தைப் பின்பற்றும் தாழ்த்தப்பட்டோரை மட்டுமே அட்டவணை சாதிகளின் பட்டியலில் சேர்க்கவேண்டும் எனவும் தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் இனத்தவர்களுக்கு உரிய தகுதி, உரிமை, வன்கொடுமை சட்டம், சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் 1950 ஆகஸ்டு 10-ம் நாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் கையெழுத்திட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது. தங்களையும் தலித்துகளாக அங்கீகரிக்க கேட்டு அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க அந்த நாளை தலித் கிறிஸ்தவர்கள் கறுப்பு நாளாகக் கடைபிடித்து வருகின்றனர். 

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ‘ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்’ தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என அறிக்கை அளித்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும் மத்திய அரசு அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரையை அரசு நடைமுறைப் படுத்தக் கேட்டு இன்று கத்தோலிக்க திருச்சபையின் தலித் பணிக்குழு சார்பில் என்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Leave a Reply