தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபட முயன்ற 40 மேற்பட்டவர்கள் போலீசார் கைது…!

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தலித் மக்களின் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் அரசு போக்குவரத்து கழகம் ராணிதோட்டம் கிளை-2 மேலாளர் மீது புகார் கொடுத்து 144 நாட்கள் ஆகி நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பேரணியாக வந்து சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபட முயன்ற 40 மேற்பட்டவர்கள் போலீசார் கைது.

குமரி மாவட்டம் அரசு போக்குவரத்துக்கழகம் ராணி தோட்டம் பணிமனையில் தலித் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பணியாளர்களை அரசு ராணிதோட்ட பணிமனை மேலாளர் பெருமாள் ஜாதி ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. அவர் மீது புகார் கொடுத்து 151 நாட்கள் ஆகியும் இதுவரையும் காவல்துறையும் மாவட்டநிர்வாகமும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி

இந்த நிலையில் இன்று குமரி மாவட்ட தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவன தலைவர் தினகரன தலைமையில் ராணி தோட்டம் பணிமனை-2  மேலாளர் பெருமாள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்து,  பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று கலெக்டர் அலுவலகத்திற்க்கு ஊர்வலமாக வந்து சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதாகாப்பு இயக்கத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்ய முயன்றபோது போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்காவாதம் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின்பு போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

ராணி தோட்டம் பணிமனை மேலாளர் குமரி மாவட்ட முக்கிய விஐபியின் உறவினர் என்பதால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். எனவே தலித் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply