கந்த சஷ்டி கவச பக்தி பாடல்களுடன் இந்துகள் இல்லங்களில் வேல் பூஜை

குமரிமாவட்டத்தில் பாஜகவினர் வீடுகளிலும்,இந்து கோவில்களிலும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இந்து வீரோத செயல்களில் ஈடுப்படுவோர்களை கண்டித்து வேல் பூஜை செய்து வழிப்பட்டுள்ளனர்.

கந்த சஷ்டி கவசம் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலையும் இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் இந்து விரோத சக்திகளை எதிர்த்து வீடு தோறும் கந்த சஷ்டி பஜனை பாடல்கள் பாடி வேல்பூஜை செய்து வழிப்படதமிழக பாஜக தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சமீப காலமாக இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் விதமாக பலர் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு இந்துகளின் மனதை புண்படுத்தி வருவதை கண்டித்து அந்த அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் இந்து வீரோத சக்திகளை எதிர்க்கும் விதமாக 9/8/2020 தேதி இந்துகள் மற்றும் பாஜகவினர் தங்கள் வீடு தோறும் வேல் பூஜை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்துகளும் வேல் பூஜை செய்துள்ளனர்.

அதே போல்குமரிமாவட்டத்தில் பாஜக பொருளாளர். முத்துராமன் தலைமையில் வெள்ளாடிச்சி விளை ஊர்மக்கள் தங்களின் தெரு வீதிகளில் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி பாடல்கள் பாடி முருகன் பெருமானை வழிப்பட்டனர் அதை போல் இந்துகளும் தங்களின் இல்லங்களில் முருகன்பெருமானின் புகைப்படத்திற்கு வேல் பூஜை செய்து வேல் உண்டு வினை இல்லை என்று கந்த சஷ்டி பாடல்களை குடும்பத்தினரோடு பாடல்கள் பாடி முருகனை வழிப்பட்டுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதகிருஷ்ணன் அவரது வீட்டிலும், நாகர்கோவில் முன்னாள் நகர்மன்ற தலைவி மீனாதேவ் வீட்டில் வேல் பூஜை செய்துள்ளார்…

Leave a Reply