நாகர்கோவில் கலப்பை மக்கள் இயக்கம், மனிதன் அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கினர்

கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் மனிதன் அறக்கட்டளை இணைந்து நாகர்கோவில் அண்ணா பேருந்துநிலையம் முன்பு பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. இதில் சமூகஆர்வலர் கணணன் மற்றும் கோட்டார் காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், பி.டி.செல்வகுமார் மற்றும் சலீம் ஆகியோர் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள பால், முட்டை, பழம், கபசுர குடிநீர், விட்டமின் மாத்திரை போன்றவை இலவசமாக வழங்கினர்..

குமரிமாவட்டத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக கடந்த இரண்டு மாதங்களாகவே பரவி வருகிறது.அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் தன்னார்வலர்களின் பங்கும் அளப்பரியாது ஒருபுறம் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குதல் மற்றொரு புறம் கொரோனாவால் தொழில் இழந்து வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவி செய்யும் கடமையாக இந்த அமைப்புகள் கடந்த ஆறு மாத காலங்களாக உதவி வருகிறது.

இந்நிலையில் ஆதரவற்ற பொதுமக்களுக்கு நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டி ஊட்டச்சத்து உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் அதற்காக நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பிரபல சினிமா இயக்குனரான பி.டி.செல்வகுமார் (கலப்பை மக்கள் இயக்கம்)மற்றும் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் கண்ணன், கோட்டார் காவல் ஆயாவாளர் செந்தில்குமார்,சலீம் கலந்து கொண்டு வழங்கினர்.

Leave a Reply