நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

குமரிமாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினசரி கடைகளை இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டி ராஜீவ்காந்தி பஞ்சாயத் ராஜ் காங்கிரஸ் கமிட்டி குமரி மேற்கு மாவட்டம் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த 6 மாத காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது தமிழக முதல்வர் கட்டுப்பாடுகளை சில தளர்வுகளோடு செயல்பட உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவுகளை குமரிமாவட்டத்தில் நடைமுறைபடுத்த வில்லை ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதரத்தை இழந்து வாழும் வியாபரிகளுக்கு இந்த நேர குறைப்பு மீண்டும் சுமையை ஏற்படுத்தும் எனவே உடனே மாலை எட்டு மணிவரை தனிகடைகளை திறக்கு குமரிமாவட்ட ஆட்சியர் உத்திரவு பிறப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு நாட்டு மக்களுக்கு கொரோனாவை காட்டி பயமுறுத்தி வருகிறதாகவும், குமரிமாவட்டதில் இபாஸ் கிடைப்பதில் காலதாமதம் செய்யப்படுவதாகவும், குமரிமாவட்ட கொரோனா பரிசோதனை சாவடிகளில் வெகு நேரம் மக்கள் காத்து நிற்கவும், அதே போல் பரிசோதனை சாவடியில் உணவும் கழிவறை வசதியும் இல்லாமல் அவதி படுவதாகவும் தெரிவித்தும்.

பலமுறை புகார்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சார்பில் குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் குமரிமாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர்.சாமுவேல் சார்ஜ் தலைமை தாங்கினார்,மற்றும் எஸ்.ஷாஜி,காங்கிரஸ் மேற்கு மாவட்ட செயலாளர்.குருஸ்சுமுத்து,காங்கிரஸ் மேற்கு மாவட்ட நகர தலைவர்.ரமேஷ்,சுஜின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Leave a Reply