இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம்

நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவக்கப்பட்ட ஆகஸ்ட் 9 நினைவு கூர்ந்து இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழுக்கத்தோடு இன்று நாடு தழுவிய போராட்டங்கள் நடத்திட அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சிஐடியு எல்பிஎப் ஐஎன்டியுசி எச்எம்எஸ் எஐடியுசி எம்எல்பை உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

மத்தியில் பிஜேபி தலைமையிலான மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனடியாகவே தொழிலாளர்களுக்கு எதிரான கார்ப்பரேட்டுகள் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக திட்டங்களை செயல்படுத்தி வருவதை கண்டித்தும், சமீபகாலமாக தொழிலாளர் நல சட்டங்களை முழுமையாக நீக்கி அதை நான்கு தொகுதிகளாக சுறுக்குவது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்வது போராட்டங்களில் விளைவாக கிடைக்கப்பெற்ற எட்டு மணி நேர வேலை உரிமையை 12 மணி நேரமாக உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறதை கண்டித்தும்.

கொரோனா காலத்தில் மக்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு சுதேசி பேசிக்கொண்டே பாதுகாப்பு தொழிற்சாலைகள் நிலக்கரி சுரங்கங்கள் விண்வெளி அறிவியல் அணுவாற்றல் காப்பீடு வங்கி ரயில்வே உள்ளிட்டவற்றை தனியாருக்கு விற்கக் கூடிய நடவடிக்கையை மத்திய அரசாங்கம் செய்வது போன்றும்,
மின் திருத்த மசோதா 2020 சூழியல் தாக்க மதிப்பீடு 2020 போன்ற சட்டங்கள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆகவே இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் அதைப்போல பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை மிகக் கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்குப் பின்னால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள் .

முறை சாரா தொழிலாளர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை உடனடியாக மாதம் 7500 ரூபாய் நிவாரணம் வழங்கவும் அவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், நலவாரியங்களில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண பணம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல மாதமாக வழங்கப்படாத ஓய்வூதியம் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்,உயிரை பணயம் வைத்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து விதமான பணியாளர்களுக்கும் ரூபாய் 50 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும்.

முறைசாரா தொழிலாளர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழு உடனடியாக கூட்ட வேண்டும் நலவாரிய பதிவில் விஏஓ சான்று பெறும் கூட்டத்தை நடைமுறையை கைவிட வேண்டும் . ஆன்லைன் பதிவில் இருக்கும் குளறுபடிகளை போக்கி உரிய வழிகாட்டுதல்களை அரசு அறிவிக்க வேண்டும் . கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவை காரணம்காட்டி மூடி வைக்கப்பட்டுள்ள முந்திரி தொழிற்சாலைகள் , நாகம்மாள்மில் உள்ளிட்ட அனைத்து ஆலைகளை உடனடியாக திறப்பதற்கும் ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் கிடைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் குமரிமாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்ற மாநில பொதுதுறை நிறுவனமான அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான 1000 ஹெக்டேர் நிலக்கை வனத்துறைக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும் .

அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினையை பேசி முடிக்க வேண்டும் குமரி மாவட்ட வளர்ச்சி திட்டங்களில் குமரி மாவட்ட உள்ளூர் கட்டுமான தொழிலாளர்கள் தினக்கூலி தொழிலாளர்கள் பயன்படுகின்ற அளவிலான திட்டங்களை செயல்படுத்த வேண்டும், மீன் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக விலகலோடு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

நாகர்கோவிலில், பார்வதிபுரம்,வடசேரி, கோட்டார்,அண்ணா பேருந்துநிலையம், அரசுபோக்குவரத்து டெப்போக்கள், பிஎஸ்என்எல் அலுவலகம்,உள்ளிட்ட பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்தில் சிஐடியு மாவட்டசெயலாளர் கே தங்கமோகனன் எச்எம்எஸ் மாநிலத் தலைவர் எம் சுப்பிரமணியபிள்ளை ஏஐடியுசி இசக்கிமுத்து எல்பி எஃப் மாநிலச் செயலாளர் இளங்கோ எல்பி எஃப் பெருமாள் ஐஎன்டியூசி செயலாளர் வட்டவிளை முருகேசன் எம்எல்எப் செயலாளர் ந மகாராசன் மீன் சங்க மாநில சம்மேளன பொதுச் செயலாளர் எஸ் அந்தோணி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply